வடலி - Vadalee

உணவு நஞ்சேற்றத்தால் கே.எவ்.சி–க்கு 8.3 மில்லியன் டொலர் இழப்பு
அவுஸ்திரேலியாவில் சிட்னி என்னும் இடத்தில் KFC-ல் ‘ருவிஸ்ரர்-றப்’ என்னும் கோழி உணவை வாங்கிச் சாப்பிட்ட மொனிக்கா என்பவர் ‘சாமனெலா’ நஞ்சேற்றத்தால் சுகயீனமுற்றார்.

சுகயீனமுற்ற பெண்ணுக்கு கடுமையான மூளை பாதிப்பு ஏற்பட்டதால் அவுஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் முகுஊ விரைவு உணவு நிறுவனம் தனது ‘கவனம் செலுத்தும் கடமையை’ மீறியுள்ளது எனக் கண்டு நட்ட ஈடாக 8.3 டொலர் (£5.1மி) செலுத்த வேண்டும் என உத்தரவுட்டுள்ளது.

நஞ்சேற்றம் மொனிக்காவை சக்கர நாற்காலியில் காலத்தைக் கழிக்க வேண்டியதாக ஆக்கிவிட்டதுடன் பேசமுடியாமலும் செய்துவிட்டது.

தீர்ப்பு தமக்கு ஆறுதல் அளித்துள்ளதாக மொனிக்காவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றத்தை தந்தள்ளது என்றும் தாம் மேன்முறையீடு செய்யப்போவதாகவும் முகுஊ அறிவித்துள்ளது

நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதம், சிறுநீரக செலலிழப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது!
மார்ச் 29

இங்கிலாந்தில் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதம் மற்றும் சிறுநீரக செலலிழப்பு ஏற்படுவது அதிகரித்து காணப்படுவதாக ‘டயபீட்ரிஸ் யூக்கே’ என்னும் நீரழிவுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் தாபனத்தின் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் தெரிவித்திருப்பதாவது-:

2009 – 2010 ஆண்டு காலத்தில் ரகம்-1 ரகம்-2 வகை நீரழிவு நோயுள்ள 1.9 மில்லியன் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 13.000 இக்கும் அதிகமானவர்களுக்கு பக்கவாதம் வந்துள்ளது என்றும் இது ஆண்டு 2006-2007 உடன் ஒப்பிடுகையில் 57% அதிகரிப்பாகும்.

அத்துடன் 7,000 பேருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது இது ஆண்டு 2006-2007 உடன் ஒப்பிடுகையில் 31% அதிகரிப்பாகும்.

இந்த ஆய்வுகளில் இருந்துவரும் தகவல்கள் அதிர்ச்சியை தருவனவாக இருப்பதாக ‘டயபீட்ரிஸ் யூக்கே’ தாபனத்தின் தலைமை இயக்குனர் பார்பரா ஜங் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்-:

ஐக்கிய இராச்சியம் முழுமையாக 2.9 மில்லியன் மக்களுக்கு நீரழிவு நோய் உள்ளது மேலும் 850,000 பேருக்கு ரகம்-2 நோய் இருப்பது இன்னும் கண்டபிடிக்கப்பட்டாமல் இருக்கிறது

அண்மையில் எடுக்கப்பட் புள்ளிவிபரத்தின் பிரகாரம் நீரழிவு உள்ளவர்களில் கால்பங்கினருக்கு முதல் வருடத்தில் அவர்களின் சிறுநீரகம் சோதனை செய்துபார்க்கப்பட்டது கூட மறந்துபோயிற்று; 7 சதவிதத்தினர் இரத்த-அழுத்த சோதனை செய்தே பார்க்கவில்லை;

நீரழிவு உள்ளவர்களுக்கு பக்கவாதமும் சிறுநீரக செயலிழப்பும் ஏற்பட்டுவரும் அளவு அதிர்ச்சியைத் தருகிறது, அப்படியிருந்தும் இதை தடுப்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் உடல் நலத்தை சோதனை செய்து பார்க்காமல் இருக்கின்றனர்.

நீரழிவு நோய் உள்ளவர்கள் ஆண்டுதோறும் சோதனை செய்து வந்தால் சிக்கல்கள் எற்பட்டு பக்கவாதமாக, சிறுநீரக செயலிழப்பாக அவை மாறுவதை தடுக்கலாம். என்றார்.

சோளம் பொரி ஒரு சிறந்த ‘அன்டிஒக்சிடன்ற்’ உணவு
சுவை ஏதும் சேர்க்கப்படாத சோளம் பொரியானது ஒரு குறைந்த கலோரி கொண்ட பத்திய (டயற்) உணவு என எல்லோராலும் போற்றப்பட்டு வருகிறது.

இந்த சோளம் பொரியில் பழங்கள் மரக்கறிகளில் இருப்பதைக்காட்டிலும் அதிகஅளவில் ‘அன்டிஒக்சிடன்ற்ஸ்’ என்ற ஊட்டப்பொருள் இருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்ற தெரிவித்துள்ளது.

அன்டிஒக்சிடன்ற்ஸ் (உயிர் வளியேற்ற எதிர்ப்பிகள்) என்பது நமது உணவிலுள்ள ஒரு பொருள் அல்லது ஊட்டப்பொருள் ஆகும். எமது உடலானது உயிர் வாயுவை(ஒக்சிசனை) பாவிக்கும் போது இயற்கையாகவே நச்சு பொருள்கள் உருவாகுகின்றன. இவை உடற்கலங்களை பாதிக்கக்கூடியவை.   அன்டிஒக்சிடன்ற்ஸ் அவ்வாறான நச்சுப்பொருள்களை அழித்து தீங்கு ஏற்படாமல்; தடுப்பதுடன் அவற்றால் ஏற்பட்ட சிதைவையும் சரிசெய்கிறது.

பென்சில்வேனியாவிலுள்ள ‘ஸ்கிறன்ரன்’ பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சோளம்; பொரியில் அதிகஅளவு செறிவுகூடிய அன்டிஒக்சிடன்ற்ஸ் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு ‘பரிமாறல்’ சோளம் பெரியில் 300மெ.கி அன்டிஒக்சிடன்ற்ஸ் இருக்கிறது என்றும் இது பழங்களிலும் பார்க்க இரட்டிப்பு மடங்காகும் என்றும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பழங்களில் அன்டிஒக்கிடன்ற்ஸ் அளவு 160மெ.கி ஆகும்.

மொறுமொறுப்பான சோளன் பொரியை அதன் உமியுடன் உண்டால் அதிகளவு செறிவான அன்டிஒக்சிடன்ற்ஸ்-சும் நார்ச்சத்தும் கிடைக்கும், என்கிறார் ஆய்வாளர் வின்;சன்.

சோளம் பொரியில் அன்டிஒக்சிடன்ற்ஸ் நிறைந்த அளவில் செறிந்து காணப்பட்டாலும் மக்கள் இதை பழங்கள் மரக்கறிகளுக்கு ஈடான உணவாக கொள்ளலாகாது. ஏனென்றால் பழங்களிலும் மரக்கறிகளிலும் இருக்கும் ஏனைய ஊட்டச்சத்துக்களும் விட்டமின்களும் எமது நாளார்ந்த உணவில் அவசியம் தேவையானது என இந்த ஆய்வை செய்த விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சோளம்; பொரி ஒரு நொறுக்குத் தீனியான உண்பதற்கு சிறந்த உணவு.

இது 100 சதவீதம் பதப்படுத்தப்படாத முழுமையான தானியம்.

காலை உணவாக பெட்டிகளில் வரும் ‘சீரியல்’; வகை உணவுகள் முழுமையான தானியங்கள் என்று கூறிக்கொண்டாலும் நிறையளவில் 51 சதவிதத்துக்கு சற்ற அதிகமான அளவே அவைகளில் முழுமையான தானியம் உள்ளது

சோளம் பொரி ஒரு பரிமாறுதலில் நமது உடலுக்கு நாளொன்றுக்குத் தேவையான 70 சதவீதமான முழுத்தானியம் கிடைக்கிறது.

சோளத்தை வறுக்கும் முறையிலும் வித்தியாசம் உள்ளது என்றும், சூடான காற்றை செலுத்தி வறுப்பதிலும் பார்க்க ‘மைக்குரோவேவ்’ என்னும் மின்னடுப்பில் வறுப்பதில் இருமடங்கு கலோரிகள் கிடைக்கிறது என்று ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரம் ஆகிவரும் தமிழ் மொழி!
தமிழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் புலம்பெயர்ந்த சூழலில் வாழும் பிள்ளைகள் தமது தாய் மொழியை கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற நல்நோக்கமே. ஏராளமான பாடசாலைகள் இந் நற்பணியை செய்து வருகின்றன.

பிள்ளைகள் தமிழைக் கற்றிருந்தால் தாம் இல்லாத காலத்திலும் தமது பிள்ளைகள் வேரை மறவாதவர்களாக தங்கள் தாய் மொழியாகிய தமிழோடு ஒன்றித்து இருப்பார்கள் என்ற  ஆசையிலேயே பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி தமிழைப் படிக்க வைக்கிறார்கள்.

அதுபோலவே சங்கிதம், நடனம் மற்றும் வாத்தியகருவிகள் போன்றவற்றை பழகுதலும் ஆகும். எமக்கு பிறகும் எமது பிள்ளைகள் தமது கலாச்சாரம் பண்பாடு தெரிந்தவர்களாக தமிழர் என்ற அடையாளத்துடன் வாழவேண்டும் என்கிற குறைந்டத பட்ச ஆசைதான் எல்லா பெற்றோர்களும் தமது பிள்ளைகளை தமிழ் பாடசாலைகளுக்கு அனுப்புவதற்குரிய அடிப்படைக் காரணமாக இருக்கிறது என்பதை அறிவோம்.

நற்சாட்சி பத்திரம் பெறுதல், யாருடைய தேர்வுக் குழுமம் சிறந்தது (Board) ஒக்ஸ்பேர்ட்டா, கேம்பிறிச்சா என்று பார்ப்பதெல்லாம் இரண்டாம் பட்சமே தவிர பெற்றோர்களின் அடிப்படை நோக்கம் அதுவல்ல என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆனால் தேர்வுக் குழுமங்களுக்கு இடையே உள்ள போட்டிகளும் பாடசாலைகளுக்கு இடையே இருக்கும் போட்டிகளும் பெற்றோர்களின் அடிப்படை நோக்கத்தை நகர்த்தி வேறெங்கேயோ கொண்டுபோய் விட்டுள்ளன.

இங்கே எடுக்கும் பெறுபேறுகள் பிரதான கல்விக்கு உறுதுணையாக இருக்கும், ‘யூக்காஸ்’ புள்ளிகளுடன் சேர்க்கலாம், பாடத்திட்டப் புறச்செயல்களாக  இடைநிலைப் பாடசாலை நுழைவுக்கு வலுச்சேர்க்கும் என்று பெற்றோர்களுக்கு கூறப்படுகிறது. அதனால் சில அப்பாவி பெற்றோர்கள் எடுபட்டு விடுகிறார்கள்

பொதுவாக பெற்றோர்களுக்கிடையே வெளியில் தெரியாத ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும் இதன் காரணத்தால் “எமது பிள்ளைகள் படித்து தமிழ் உணர்வு பண்பாடு தெரிந்தவர்களாக வாழவேண்டும். இதுதான் எமது அடிப்படை நோக்கம், மற்றதெல்லாம் எமக்கு இரண்டாம் பட்சமே” என்று அடித்துக்கூற முடியாதவர்களாய் கல்விச் சுனாமியினால் அடித்துச் செல்லப்படுகின்றனர்.

தமிழ் படித்தால் வாழ்க்கைக்கு தேவையான பணம் சம்பாதிக்லாம் என்று ஒரு பெற்றோர்களுக்கும் எதிர்பார்ப்பதில்லை. வாழ்க்கைக்கு தேவையான பணத்தை சம்பாதிப்பதற்கு பிரதானமான பாடசாலைக்கு போகவேண்டும் என்றும் அங்கு உதவி தேவையானால் ரியுசனுக்கு அனுப்பவேண்டும் என்றும் எல்லாப் பெற்றோர்களுக்கும் நன்கு தெரியும்.

தமது நேரத்தையும் பணத்தையும் செலவுசெய்து பல சிரமங்களுக்கும் மத்தியில் தமிழ் பாடசாலைகளுக்கு கொண்டுபோய் விட்டு கூட்டிவருவது எல்லாமே தமது பிள்ளைகள தமக்குப்பின்னும்; தமிழர் என்ற உணர்வுடன் வாழவேண்டும் என்ற நோக்கமே அன்றி புள்ளிகள் எடுப்பதல்லை.

புள்ளிகள், சான்றிதழ் பெறுவது எல்லாம் இரண்டாம் பட்சமே தவிர தலையான நோக்கம் அதுவல்ல.

ஆனால் வியாபாரம் கல்வியிலும் ஓடி விளையாடுகிறது. மொழிசார்ந்து வைக்கப்படும் போட்டிகளும் வியாபாரமாக மாறிவருகின்றது. எங்கும் வியாபாரம் எதிலும் வியாபாரம் என்று ஆகிவிட்ட உலகில் இப்பொழுது நம் தாய்மொழியும் சிக்கியுள்ளது வேதனை அளிக்கிறது.

30 ஆண்டுகாலபோரில் சமூகக்கட்டமைப்பு தகர்ந்து, வாழ்வாதாரங்கள் சிதைந்து வேரோடு பிடுங்கப்பட்டு வேற்றுமண்ணில் வேர் ஊன்றி நிற்கிறது ஈழத்தமிழர் சமுதாயம்

சுற்றிநடப்பதெல்லாம் வேதனை தருபவையாகவும் கேட்பதெல்லாம் அவலங்களாகவுமே தினமும் எம் கண்முன்னே வந்து மோதுகின்றன.

உடலால் நொந்தும் உளத்தால் சோர்ந்தும் வியாதி வருத்தமே மிச்சம் என்று ஆகிவிட்ட நிலையிலும் தமது விழுதுகள் தமிழர் என்ற அடையாளத்துடன் வாழவேண்டும் என்று தமது அடையாளத்தை நிலைநிறுத்ததத் துடிக்கிறது பெற்றோர் உள்ளம்.

ஆனால் பாடசாலைகள் எத்தனை பிள்ளைகள் தமிழில் ‘ஓ’ லெவல் எடுக்கிறார்கள், எத்தனை பிள்ளைகள் ‘ஏ’ லெவல் என்று ‘லிக் டேபிளில்’ இடம் பிடிக்க ஒடுவதுபோல் ஒடிக்கொண்டிருக்க, மக்களும் சேர்ந்து ஓடுவது போல் இருக்கிறது என சில பெற்றோர் ஆதங்கப்படுகின்றனர்

தமிழ் மொழியை படிப்பது வேறு. தமிழ் அடையாளத்துடன் வாழ்வதற்கு தமிழ் மொழி படிப்பது என்பது வேறு. இரண்டும் ஒன்றல்ல.

தமிழ் மொழியை படிப்பது என்பது யேர்மன் மொழி படிப்பதுபோல் பிரஞ்சு மொழியை படிப்பதுபோல் தமிழ் மொழியையும் ஒரு இரண்டாம் மொழியாக படிப்பது என்பது ஆகும். இங்கே ஒரு பிள்ளை மொழியை மட்டுமே கற்றுக்கொள்கிறது. மொழிக்குரிய பண்பாடுகளை அல்ல.

தமிழ் அடையாளத்துடன் வாழ்வதற்கு தமிழ் மொழி படிப்பது’ என்பது தமிழ்  மொழியுடன் கலை, பண்பாடு, பெற்றோரின் தாயகம், போன்றவற்றையும் தெரிந்துகொள்வதற்குரிய முறையில் போதனைகள் அமைவதாகும்.

ஆனால் இன்று பாடசாலைகளில் எழுத, வாசிக்க கற்றுக்கொடுத்து பரீட்சையில் ‘பாஸ்’ பண்ண வைப்பதுவே குறிக்கோளாகி வருகிறது போல் தோன்றுகிறது. சமய விடயங்கள் கொஞ்சம் சேர்க்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும்.

சுடிதார், சர்வாணி மற்றும் நகை நட்டுகளுடன் சினிமா + ‘சீரியல்’களில் வருவதுதான்  தமிழர் கலாச்சாரம் என்ற எண்ணத்திற்கு பிள்ளைகள் வராமல் பார்க்கவேண்டி தேவை இருக்கா இல்லையா?

பாடத்திட்டங்கள் எப்படி இருக்கின்றன

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக சொல்லப்படும் தங்களுக்கே சரியாக விளங்காத இதிகாசங்களையும் புராணங்களையும் 21-ம் நூற்றாண்டில் மேற்கு நாடுகளில் வசிக்கும் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் கலாச்சாரத்தை பிள்ளைகளுக்கு உணர்த்தமுடியுமா?

அதேபோல் சங்க காலத்தில் தமிழர்கள் களவெழுக்கத்தில் இருந்தார்கள் கற்பொழுக்கத்தில் இருந்தார்கள் கைக்கிளை மரபு இருந்தது என்றெல்லாம் இரண்டாவது மொழியாக தமிழை படிக்கும் பிள்ளைகளுக்கு கற்பித்துக்கொடுப்பதன் அவசியம் என்ன?

தமது தாத்தா பாட்டியாலேயே கற்பனை செய்து உணரமுடியாத சங்ககால  வாழ்க்கையை பேரன், பேத்திகளுக்கும் பூட்டிகளுக்கும் 21-ம் நூற்றாண்டில் இரண்டாவது மொழியாக இங்கிலாந்தில் சொல்லிக்கொடுத்து சாதிக்க நினைப்பது என்ன?

“பாடத்திட்டத்தில் இருக்குது அதைத்தானே சொல்லிக்கொடுக்கிறோம்.” என்று கூறுவது புரிகிறது. அப்படியானால் பாடத்திட்டத்துக்கு படிப்பா? அல்லது எமது தேவைக்காக படிப்பா? என்பது தெளிவாக வேண்டும்!

சில ஆற்றலும் ஆர்வமும் உள்ள மாணவர்கள் இலக்கண இலக்கியங்களை விரிவாக படிக்கவேண்டும் என விரும்பினால் அவ்வாறான மாணவர்களுக்கு உயர் பாடத்திட்டம் இருப்பது நியாயமானது. ஆனால் எல்லோரையும் நற்சான்றிதழையும் புள்ளிகளையும் நோக்கி நகர்த்துவது அவசியமா?

நாம் இவ்வாறு செய்தால் அடிப்படையான குறிக்கோளில் இருந்து நகர்ந்து மேலும் வெகுதூரம் போய்க்கொண்டிருக்கிறோம் என்றுதானே கருதமுடியும்.

அரசியலில் ஒரு கட்சியில் இருந்து மறு கட்சிக்கு தாவுவதுபோல் பாடத்திட்டத்திலும் காலத்திற்கு காலம் பாய்ச்சல் நடக்கிறது என பெற்றோர்கள் ஆசிரியர்கள் சலித்துக்கொள்கிறார்கள்.

தமிழில் A/L செய்தால் யூனிவேர்சிட்டிக்கு ‘யூக்காஸ் புள்ளி சேர்க்கலாம் என்றும் தமிழ், சங்கீதம், நடனம் மிருதங்கம் விணை எல்லாம் படியுங்கள் அது இடைநிலைப் பாடசாலைக்கு விண்ணப்பிக்கும் போது பாடத்திட்டப் புறச்செயல்களாக கணிக்கப்படும் ஆகவே தமிழை நன்றாக படியுங்கள் என்று போட்டி போட்டு கூவி விற்றால் எப்படி இருக்கும் கல்வியின் எதிர்காலம்!

‘யூக்காஸ் பொயின்ட்’ எடுப்பதற்கும், ‘செக்கன்டறி’ பாடசாலையில் இடம் எடுப்பதற்கும் மினக்கடவேண்டிய இடம், பிரதான பாடசாலையே அன்றி தமிழ் பாடசாலைகள் அல்ல.

சான்றிதழ்களுக்கு படிப்பது என்கிற வியாபார கலாச்சாரம் தமிழ் மொழியையும் வளைத்துப் போட்டுவிட்டதா! பெற்றோர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் அதைத்தான் நாம் சொல்லிக்கொடுக்கிறோம் என பாடசாலை வட்டாரங்கள் கூறுவது புரிகிறது. ஆனால் பெற்றோர்களுக்கு விடயத்தை எடுத்துக்கூறி அவர்களையும் இணைத்துக்கொண்டு பயணிக்கும் பொறுப்பு யாருக்கு உள்ளது!

தமிழ் படிக்கும் அடிப்படை நோக்கத்தை மறந்து சான்றிதழுக்காக தமிழ் படிக்க முயற்சிப்போமானால் குளிக்கப்போய் சேறு பூசுவதைப் போலாகிவிடும்.

- வளர்க தமிழ் வியாபாரம் –

ஆக்கம்: நெடுமுடி

அணு முகில்களில் தோன்றிய பூமி
500 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை எம்மனக் கண்முன் கொணர்ந்து நிறுத்துவோமானால், அப்போது கதிரவன் என்றொரு விண்மீனும் இல்லை, பூமி என்றொரு கோளும் இல்லை. அப்போதுகூட பிரபஞ்சம் முழு மூச்சுடன் செயற்பட்டுக் கொண்டுதான் இருந்தது.

சுருள்வரைப் பகுதியின் அணு முகில்கள் உறையத் தொடங்கி, ஈர்ப்பால் உள்நோக்கி இழுபட்டு, சுழன்று, இளம் விண்மீன்கள் உருவாகிக் கொண்டிருந்தன. இப்படி உருவாகிக் கொண்டிருந்த எம் இளம் கதிரவன் வெப்பமடைந்து வீசிய ஆற்றல்

துகள்களிலிருந்து தோன்றிய பாளங்களின் ஒன்றிணைந்த வடிவங்கள்தான் எமது கோள்கள்.

இவை எல்லாம் கதிரனுவனுடன் ஒப்பிடும்போது சிறு துகள்கள்தான். எடுத்துக்காட்டிற்கு ஆகப்பெரிய கோளான வியாழன் பூமியைப்போல் 1,300 மடங்கு பெரியது. இப்பாரிய கோள்கூட கதிரவனின் 0.1 சதவீதம்தான். பூமியென்னும் எமது கோளின் வயது 450 கோடி ஆண்டுகள்.

வெப்ப நிலையில் இருந்த வான்-பொருட்களின் கொப்பளிப்புக்கள், உடைந்து சிதறிய விண்மீன்கள் பகுதிகள் ஆகியவை தான், நிலவு போன்ற 100க்கு மேற்பட் உபகோள்;களும், கியூப்பர் பட்டிக்குள் அடங்குவதும், கோள் தராதரத்திலிருந்து தரம் இறக்கப்பட்டதுமான புளுட்டோவும் மற்றும் அதை ஒத்த மற்றைய விண் பொருள்களும், வால்வெள்ளிகளும், குட்டிக் கோள்களும், விண்கற்களும் ஆகும்

புதிதாகத் தோன்றிய எமது கோளின் (பூமி) அகம் நோக்கி பாரமான இரும்புபோன்ற மூலகங்கள் ஈர்க்கப்பட்டன. இதன் விளைவு பூமியின் உள்ளகம் மட்டும் அதன் மொத்த எடையின் மூன்றில் ஒரு பகுதியாக உள்ளது. மற்றைய பகுதி எடைகுறைந்த சிலிகேற் (சிலிக்கன் என்பது மணலின் மூலகம்) பாறைகளால் ஆனது. உள்ளகத்தில் உருகிய நிலையில் பாரமான உலோகங்களின் திரவநிலை ஓட்டத்தால் தோன்றும் மின்னோட்ட விளைவே, அண்டவெளிக் கதிர் வீச்சிலிருந்து புவியைக் காக்கும் காந்த புலத்தாலாய கேடயம்.

450 கோடி ஆண்டுகளுக்கு முன் புவி தோன்றியபோது அதற்கு சமுத்திரங்கள் இருக்கவில்லை. அப்போ அவை எங்கிருந்து வந்தன? வானில் இருந்து விழுந்தனவா! ஆச்சரியப் படாதீர்கள், வானில் இருந்தும் விழுந்தன. பனிக்கட்டிகள் கொண்ட வால் வெள்ளிகளே இந்தப் பங்களிப்பைச் செய்தன. இன்றும் ஆண்டுதோறும் தொன் கணக்கில் இப்பங்களிப்பு நிகழ்கிறது. துல்லியமாக இப்படி வந்த நீர் எத்தனை சதவீதம் என்று பிரித்துப்பார்க்கும் அளவுக்கு தொழிநுட்பம் இன்னும் இல்லை. சிறு கோள்களும் பங்களிப்புச் செய்துள்ளன. இதன் முழு விபரத்திற்கு இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.

வளி மண்டலமும் வேறுவிதமாக இருந்தது. உயிர்வாழத் தேவையான உயிர்வளி இம்மியளவு கூட இல்லாமல் உயிர்க் கொல்லிக் கலவையான நீர்வளி, மிதேன், அம்மோனியா, சயனைட் ஆகியவையே இருந்தன. 340 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் தோன்றி, ஒளிச்சேர்க்கை மூலம் உயிர்வளியை வெளியிட ஆரம்பித்து அதைத் தொடர்ந்து 200 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அல்கி என்னும் உயிரினம் கரியமலவாயுவை உள்ளெடுத்து உயிர் வளியை வெளிவிட ஆரம்பித்த நாளிலிருந்து உயிர்வளியின் அளவு உயர ஆரம்பித்து எம்போன்ற உயிரினங்கள் வாழும் சூழல் ஏற்பட்டது.

இன்றைய சூழல்தான் நம் எல்லோருக்கும் தெரியுமே. 76 மில்லி மீற்ரர் அமுக்கம் கொண்ட வளி மண்டலத்தில் 20 சதவீதம் உயிர்வளியால் ஆனது. பூமியின் மேற்பரப்பின் மூன்றில் இரண்டு பகுதியை சமுத்திரங்கள் மூடியுள்ளன. மேடு, பள்ளம், மலை ஆகியவை அற்று சீரான உருண்டையாக பூமி இருந்திருந்தால் ஒன்றரை மைல் உயரத்திற்கு பூமியை மூழ்கடிக்க இந்த நீர் போதும். அதனால் அதிகளவு நீரால் ஆனது பூமி என்று எண்ண வேண்டாம். பூமியின் எடையின் .05 சதவீதம்தான் எங்கள் உயிர்நாடியான நீர்.

எத்தனையோ வகை உயிரினங்கள். 60,000 வரையான முள்ளந்தண்டுள்ள உயிரினங்கள். அவற்றுள் 5416 பாலூட்டிகள். 12 இலட்சம் வரையான முள்ளந்தண்டில்லாப் பிராணிகள். அவற்றுள் ஒன்பதரை இலட்சம் பூச்சி வகைகள். 3 இலட்சம் வரையான தாவரங்கள். மூன்று இலட்சம் வரையான காளான், அல்கே, லிச்சன்ஸ் போன்ற உயிரினங்கள். இவற்றைவிட நுண்ணுயர்கள், அதிநுண்ணுயிர்கள் (வைரஸ்) வேறு. இவை எல்லாம் எம் கோளுக்கு எழில் ஊட்டுகின்றன. மலட்டுக் கோள் என்ற பெயரை மறுக்கச் செய்கின்றன.

- சி.மாசிலாமணி

ஆறு வயதினருக்கு வாசிப்பு தேர்வு!
ஆறு வயதினருக்கு அரசு அறிமுகப்படுத்த உள்ள வாசிப்பு தேர்வு பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

“அனாவசியமானதும் பொருத்தமற்றதும்” என கூறுகிறது ‘நெசினல் யூனியன் ஒவ் ரீச்சர்ஸ்’ எனப்படும் ஆசிரியர் தொழிற்சங்கம். இது தொடர்பான எச்சரிக்கையை அடுத்த ஏப்பிரல் மாதம் நடக்கவிருக்கும் தனது வருடாந்த மாநாட்டில் அது விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற ஆண்டு இறுதியில் ‘வாசிப்பு குறைபாடு காரணமாக பிள்ளைகள் கல்வியை தொடரமுடியாது விடுபட்டுப் போகிறார்கள்’ என்று எழுந்த கோ~ங்களைத் தொடர்ந்து அரசு இந்த புதிய வாசிப்பு சோதனையை அறிவித்திருந்தது.

இந்த புதிய தேர்வு குரலொலியை அடிப்படையாகக் கொண்டது. அதாவது முழுமையான சொற்களை அடையாளம் காணுவதைப் பார்க்கிலும் ஓசையை குவிமையப்படுத்தும் முறையினைக் கொண்டது.

வாசிப்புத்திறன் தேர்வின்; போது மாணவர்கள் ஒரு தொகுதி சொற்களை ஓசைபடும்படி கூறுமாறு கேட்கப்படுவார்கள், இதில் அவர்கள் இயற்றிய சொற்களும் அடங்கும்; என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு பிள்ளைகளும் வேவ்வேறு விதமான முறையில் வாசிக்கின்றார்கள் என்று ஆசிரியர் தொழிற்சங்கம் கருதுகிறது. இதனால் தேர்வு வாசிப்பு தரத்தை உயர்த்தும் என்ற அரசின் கருத்தை சங்கம் எதிர்க்கிறது.

புதிய வாசிப்பு தேர்வு நடைமுறைக்கு வந்தால், 11+ பரீட்சை தமிழ்மக்கள் மத்தியில் களைகட்டியதுபோல் 6 வயது வாசிப்பு தேர்வும் பிரபலமாகும் என்பதில் சந்தேகமில்லை. எனவே கற்றுக்கொடுப்பவர் சரியான குரலொலி முறையில் சொல்லிக்கொடுக்கும் உச்சரிப்பாளராக இருக்க வேண்டியது அவசியமாகும்.

வரட்சி காரணமாக ரப்பர் குழாய் பாவனை தடைசெய்யப்படுகிறது
இங்கிலாந்தின் தெற்கு மற்றும் கிழக்கு பாகங்களில் வரட்சி காரணமாக ரப்பர் குழாய் பாவனை தடைசெய்யப்படுகிறது.

ஏப்பிரல் 5-ம் திகதியில் இருந்து இத் தடை அமுலுக்கு வருகிறது.

சதேர்ண் வாட்டர், சவுத் ஈஸ்ற் வாட்டர், தேம்ஸ் வாட்டர், அங்கிலியன் வாட்டர், சட்டன் அன் ஈஸ்ட் சறே, வியோலியா சென்றல், வியோலியா சவுத் ஈஸ்ட் ஆகிய 7 நிறுவனங்கள் இந்த தண்ணீர் கட்டுப்பாட்டை கொண்டுவருகின்றன.

இரண்டு குளிர்பருவங்களில் வழமைக்கு மாறான மழைவீழ்ச்சி குறைவால் இந்த வறட்சி ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

ரப்பர் குழாய் பாவித்து கார்-கழுவுதல், தோட்டம் மற்றும் பூஞ்செடிகளுக்கு நீர் பாச்சுதல், நடைபாதை, சுவர், யன்னல் கழுவுதல் போன்றவை தடுக்கப்பட்டுள்ளது.

சிகப்பு ரக இறைச்சி உண்டால் ஆயுள் குறையும்!
அதிகப்படியான சிகப்பு ரக இறைச்சி உண்பவர்களுக்கு ஆயுள் குறைவடையலாம் என காவாட் மருத்துவ பாடசாலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

120,000 பேர் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில் சிவப்பு ரக இறைச்சி உண்பவர்களுக்கு புற்றுநோய் மற்றும் இருதயக்கோளாறுகளால் சாவு ஏற்படுவதற்குரிய ஆபத்து அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.

சிகப்பு ரக இறைச்சிக்கு பதிலாக மீன், கோழி மற்றும் கொட்டை வகைகள் சாப்பிடுவது ஆபத்தைக் குறைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பிரித்தானிய ‘காட் பவுண்டேசன்’ என்னும் இதய வளத்தை கவனிக்கும் நிறுவனம் நிறை-உணவின் ஒரு பகுதியாக சிவப்பு-ரக இறைச்சி சாப்பிடப்படலாம் என்று கருதுகிறது

1986-ல் இருந்து 2008-ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 37இ698  ஆண்களின் தரவுகளையும் 1980-ல் இருந்து 2008-ம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியில் 83இ644 பெண்களின் தரவுகளும் ஆய்வாளர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டது.

அதனடிப்படையில, தமது உணவில் தினமும் சிவப்பு ரக இறைச்சியை எடுத்து வருபவர்கள் சாவை 13மூ வீதத்தாலும் ஆபத்தான இதய நோயை 18மூ வீதத்தாலும், புற்றுநோயை 10மூ வீதத்தாலும் அதிகரிக்கிறார்கள் என  அறிவித்துள்ளார்கள்.

பதப்;படுத்தப்பட்ட இறைச்சி வகைகளுக்கு பொதுவான சாவு வீதம் 20மூ வீதத்தாலும் இதயநோய் 21மூ வீதத்தாலும் புற்றுநோய் 16மூ வீதத்தாலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளனர்.

அதிக அளவு எடுப்பவர்களுக்கு இதயநோய் மற்றும் புற்றுநோய்க்கான காரணிகள் கனிசமான அளவு அதிகரிக்கப்படுகிறது என அறிக்கை கூறுகிறது.

சிவப்பு ரக இறைச்சியில் காணப்படும் ‘சச்சுறேட்ரட் பற்’ எனப்படும் பூரிதக்கொழுப்பு இதய நோய் அதிகரிப்புக்குரிய காரணியாகவும், பதனிடப்பட்ட இறைச்சிவகைகளில் பாவிக்கப்படும் சோடியம் என்னும் உப்பு இரத்த அழுத்தத்தை அதிகரித்து இரத்தநாடி சார்ந்த நோய்களை ஏற்படுத்துகிறது என்றும் ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

குழப்படியான சிறுவர்களை இரண்டு வயதாக இருக்கும் போதே அடையாளம் காணவேண்டும்!
08 பங்குனி 2012

தீயசெயலில் ஈடுபடல், வலுச்சண்டை போதல் போன்ற வாழ்க்கை முறைக்குள் பிள்ளைகள் வீழ்வதற்குமுன் அவர்கள் இரண்டு வயதாக இருக்கும்போதே அதை இனம்காணலாம் என அரச ஒழுக்கப்பயிற்சி நிபுணர் நிபுணர் சார்ளி ரெய்லர் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 7ம் திகதி அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வழி தவறக்கூடிய நிலையிலுள்ள பிள்ளைகளின் தீய நடத்தைகள் பரவாமல் தடுப்பதற்கு ஐந்துவதிலேயே அவர்கள் பிரத்தியேக நல்லொழுக்க பள்ளிகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.

நேசரி பாடசாலைகள் ஒழுக்கநெறி தவறக்கூடிய பிள்ளைகளை அடையாளங்கண்டு எல்லைக்கோடுகளையும் சமூகத்திறன்களையும் கற்றுக்கொள்வதற்கு அவர்களைப் பிரத்தியேக பாடசாலைகளுக்கு பரிந்துரை செய்யவேண்டும்

எந்தப் பிள்ளையும் கொஞ்சம் தடம்புரளலாம்,  ஆனால் அவர்கள் தடம்புரளும் போது ஓடிக்சென்று, நேரானதும் எல்லை வரையறைப்பட்டதுமான ஒரு பாதைக்கு அவர்கள் திரும்புவதற்கு உதவக்கூடிய ஒழுங்குமுறை எம்மிடம் இருக்க வேண்டும்.

தீய நடத்தைகளை இளம் பிள்ளைகளாக இருக்கும்போது கையாளுவது இலகுவானது ஏனென்றால் பழக்கவழக்கங்கள் ஆழமாக வேர்ஊன்றாத நிலையில் இருக்கும் பருவமாகும்.

அவர்கள் இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து வயதாக இருக்கும்போது அவ்வாறான நடத்தைகள் வெளிவருவது காணக்கூடியதாக இருந்தால் அந்தநேரம்தான் நாம் தலையிடுவதற்குரிய நேரமாகும். என்கிறார்.

திரு. சார்ளி ரெய்லர் அவர்களின் இந்த முன்மொழிவானது கடந்த ஆவணி மாதம் பிரித்தானியாவில் நடந்த கலவரத்தின் பின் குழப்பம் விளைவித்த இளையோர்களுக்கான வழிவகைகளை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பாக அவர் உருவாக்கிய திட்டப்பொதியின் ஒரு பாகமாகும்;

அவர் மேலும் குறிப்பிடுகையில்;:-

அதிக குழப்பம் விளைவிக்கத்தக்க பிள்ளைகள் சாதாரண பாடசாலையை தொடங்குமுன், கோபத்தை எவ்பாறு கட்டுப்படுத்துவது, எப்படி சக மாணவர்களுடன் சேர்ந்து நடப்பது போன்றவற்றைக் கற்றுக்கொள்வதற்கு பிரத்தியேக நிலையங்களுக்கு அனுப்பப்படல் வேண்டும்;

இரண்டு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு நேசரிக்கு வெளியில் இருந்து வந்து கடமையாற்றும் தனித்திறமை பெற்ற பணியாளர்களால் தீவிரமான உதவி வழங்கப்படலாம் என்றதுடன் சில விடயங்களில் பிரத்தியேக நேசரிக்கும் அனுப்பப்படலாம்

ஐந்து வயதிலிருந்து பிள்ளைகளை, பாடசாலையுடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருக்கும் ‘மாணவர் தொடர்பீட்டு பிரிவிற்கு’ (பியூப்பிள் றிபேறல் யூனிட்) அனுப்பப்படலாம் என்றார்.

பிள்ளைகள் 14 அல்லது 15 வயதில் கதிரை மேசைகளை தூக்கி எறியும் வரை காத்திருக்காது அவர்களுக்கு ஆரம்பநிலையில் உதவி வழங்குவதே இவை எல்லாவற்றினதும் நோக்கமாகும்

ஒரு விசாரணையின் போது பாடசாலையினால் வெளியில் தூக்கி எறியப்பட்ட பெருவாரியான மாணவர்கள் நலிவுற்றுப்போயுள்தை பார்த்திருக்கிறேன்.என்றார்.

ஒழுக்கம் மற்றும் உணர்ச்சிவசப்படும் பிரச்சினை உள்ள மாணவர்களுக்கு மட்டுமே உதவியளிப்பதற்காக ஆக்கப்பட்ட மேற்கு இலண்டனில் உள்ள ‘விலோ’ பாடசாலையின் தலமை ஆசிரியராக கடமையாற்றிவரும் திரு ரெய்லர் அவர்கள்;

‘அனேகமாக இம் மாதிரியான பிள்ளைகள் ஆரம்ப காலத்திலேயே வலிய தீங்குசெய்யும்  தீவிர போக்குடைய ஒழுக்கத்தை காட்டத் தொடங்குவார்கள் என்று சொன்னார்.

மேலும் குழப்படியானவர்களின் பிரச்சினை என்ன என்றும் அவர்களுக்கு தேவையான சமூகத்திறன் என்ன என்பது பற்றி அவர் கூறுகையில்;:-

இவர்களுக்கு பேச்சு – மொழி தொடர்பான பிரச்சினைகளும் இருப்பதை அனேகமாக காணலாம். அத்துடன் இவர்களில் பலர் ‘பொட்டி’யில் (சிறுவருக்கான மலசல வாளி) இருக்க பழகாதவர்களாகவும் இருப்பார்கள்….

சிறுவர்கள் தங்களுக்கு வேண்டியதைப் பெறுவதற்கு ஆட்களுக்கு அடிக்காமல் கேட்கவேண்டும் என்ற இலகுவான சமூகத்திறனை கற்றிருக்கவேண்டும்….

எப்படி சரியானமுறையில் பாடசாலையில் நடந்துகொள்வது!, அங்குள்ள ஒழுங்கு முறைமை என்ன!, எப்படி தங்களை கட்டுப்படுத்தி வைப்பது!, எப்படி தங்களை வெளிப்படுத்துவது போன்றவை பயிற்சியின்போது சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. என்றார்.

சிறுவர்களின் தேவைகளை அடையாளங் காணுதல் செயலூக்கமான மதிப்பீடு செய்தல் ஆகியவற்றுpல் கூடிய கவனம் வேண்டும் என்பதை ரெய்லர் வலியுறுத்தினார்.

பள்ளியில் இருந்து வெளியேற்றுவதுதான் ஒரே வழி என்று வருவதற்கு முன்னமே பிள்ளைகளை ஆரம்பத்தில் அடையாங்கானுதல் அவசியம் என்பதே அவருடைய பேச்சின் சாராம்சம்.

சார்ளி ரெய்லர் அவர்களின் அறிக்கை கல்வி அமைச்சர் ‘மைக்கல் கௌவ்’ அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓரினச்சேர்க்கை திருமணச் சட்டத்திற்கு எதிராக கத்தோலிக்க திருச்சபை போர்க்கொடி!
11 பங்குனி 2012

ஓரினச்சேர்க்கை திருமணத்தை 2015-ல் சட்டமாக்குவதற்கு அரசாங்கம் விரும்புகிறது.

ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டமாக்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக றோமன் கத்தோலிக்க திருச்சபை போர்க்கொடி தூக்கியுள்ளது.

இது தொடர்பான கடிதம் ஒன்றை மக்களுக்கு படித்துக்;காட்டுமாறு தனது 2,500 மீசாம்களில் உள்ள தேவாலயங்களுக்கும் அனுப்பியுள்ளது.

ஓரினச்சேர்க்கை திருமண சட்டமாகுதல் நடக்காமல் செய்வதற்குரிய கடமை கத்தோலிக்கர்களுக்கு உள்ளது கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

பிரித்தானிய கத்தோலிக்க சபையின் அதிமேற்றாணியார்களான வின்சன் நிக்கலஸ், பீற்ரர் சிமித் ஆகியோரது இந்த தடுக்கும் முயற்சி அரசியலிலும் பேசப்படும் வியடமாக மாறலாம் என அவதானிகள் கருத்து வெளியிட்டு உள்ளனர்.

அமெரிக்காவின் வாசிங்டன் மற்றும் மேரிலாந்து மாகாணங்கள் ஓரினச்-சேர்க்கை திருமணத்தை சட்டமாக்கியதைத் தொடர்ந்து, பலமுள்ள அரசியல் கலாச்சார நீரோட்டம், திருமணத்தின் வரையறையையே மாற்றுவதற்கு முயற்சிசெய்து வருகிறது என பாப்பரசர் 16-ம் பெனடிற் ஆண்டகை எச்சரித்துள்ளார்.

இச் சட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் ஸ்கொட்லாந்து கந்தோலிக்க திருச்சபையின் தலைமைக்குரு பேராயர் கீத் ஓ-பிறையன் அவர்கள் ‘இது ஒரு கோமாளித்தனமான திட்டம்’ என்றும் இது நடைமுறைப்படுத்தப்பட்டால் உலகின் கண்களில் ஐக்கிய இராச்சியத்தை வெட்கப்பட வைக்கும் என்றும் கூறியுள்ளார்

2005-ம் ஆண்டு அமுலுக்குவந்த சிவில் பாட்னசிப் சட்டம் 2004, திருமணமான தம்பதிகளுக்கு உள்ள அதே உரிமைகளை ஓரினச்சோக்கை தம்பதிகளுக்கும் வழங்கியது. ஆனாலும் அத்தகைய ஒன்றிணைவை ‘திருமணம்’ என்று அழைக்க அனுமதிக்கப்படவில்லை.

இங்கிலாந்து அங்கிலிக்கன் திருச்சபையின் அதிமேற்றறாணியார் டொக்டர் றொவான் வில்லியம்ஸ் அவர்கள் மிதவாத முறையில் இச் சட்டத்திற்கு எதிரான தனது அதிதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்.

ஓரினச்சேர்க்கை போன்ற சமூக மாற்றங்களுக்கு அரசு சட்டத்தை ஒரு கருவியாக பாவிக்கக்கூடாது என அண்மையில் ஜெனிவாவில் நடந்த அனைத்துலக தேவைலயங்களின் மாநாட்டில் இவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய தலைமை அமைச்சர் டேவிட் கமறொன் தனது தனிப்பட்ட ஆதரவை ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு வழங்கியுள்ளார்.

ஆயினும் சரமாரியான கண்டங்கள் எழுந்தால் அது பல அமைச்சர்களை யோசிக்க வைக்கலாம் என்று வெஸ்மினிஸ்ரர் வட்டாரங்களில் கூறப்படுகிறது.